நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்..! அதிர்ச்சியில் மக்கள்!!

 
Hyderabad

தெலுங்கானாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் முக்கிய சாலை ஒன்றில் 2 நாட்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சி இணையத்தில் தீயாக பரவிவந்தது. இதனை அடுத்து இந்த வீடியோ நாடு முழுவதும் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

குறித்த சம்பவம் புதன்கிழமை பிற்பகல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுவரை மொபைல் போன்கள், சார்ஜர்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்கள் தீப்பிடித்து எரியம் செய்திகள் பல வெளிவந்துள்ளன.

ஆனால் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எறிந்துள்ள சம்பவம் வாகன தொழித்துறையினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடிப்பதற்கு முன்பு புகையை கக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

From around the web