டி.என். சேஷன் போல் செயல்படுங்க! தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் குட்டு!!

 
டி.என். சேஷன் போல் செயல்படுங்க! தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் குட்டு!!

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் போல் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுங்க என்று தேர்தல் ஆணையத்திற்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.

தேர்தல் தொடர்பான நிகழ்வுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று வெள்ளிக்கிழமைக்குள் தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வெறும் சுற்றறிக்கைகளை வெளியிடுவதுடன் தேர்தல் ஆணையத்தின் கடமை முடிந்து விடவில்லை. அது சரிவர கடைப்பிடிக்கப்படுகிறதா என்று பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டியதும் ஆணையத்தின் கடமை. முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் போல் கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.ராதாகிருஷ்ணன் மற்றும் அரிஜித் பேனர்ஜி கூறியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் முறையாகச் செயல்பட வில்லை என்று உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் 8 கட்ட வாக்குப்பதிவுக்க்காக கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம்  உள்ளிட்ட 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web