கிரிப்டோ கரன்சியால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆபத்து: சக்தி காந்ததாஸ் வேதனை!

 
SakthikantaDas

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தினால் இந்தியப் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோ கரன்சி பயன்பாடு அதிகரித்துள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைக் காட்டிலும் கிரிப்டோ கரன்சிகளில் நிறையப் பேர் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

இருந்தபோதும் இந்தியாவில் கிரிப்டோ கரன்சியின் செயல்பாட்டிற்கு ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியும் இன்னும் முழுமையாக ஆதரிக்கவில்லை. இதுகுறித்து பிரதமர் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கிரிப்டோ கரன்சி இந்திய நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கக் கூடும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

Cryptocurrency

மும்பையில் நேற்று வங்கிகள் மற்றும் பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஆழமான பிரச்சனைகள் உள்ளன.

ரிசர்வ் வங்கி இது குறித்து நன்றாக ஆலோசனை செய்யப்பட்ட பிறகே இதை தெரிவிக்கிறது. மேலும் கிரிப்டோ கரன்சியால் நாட்டின் பொருளாதாரத்துக்கும், நிதி வலிமைக்கும் பெரும் அச்சுறுத்தலாக அது உருவெடுக்கக்கூடும்.

இதுகுறித்து விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும். கிரிப்டோ கரன்சியில் கணக்குகளைத் துவக்க பல்வேறு ஊக்கத் தொகைகள் வழங்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிந்தைய சூழ்நிலையில் நாடு சீரான வேகத்தில் வளர்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. அதே வேளையில், முதலீட்டு அடிப்படையிலான மீட்சியைத் தூண்டுவதில் பொதுச் செலவுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

From around the web