புதுவையில் மே 3-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு!! ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு

 
புதுவையில் மே 3-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு!! ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு

புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய கடைகள், மருந்தகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தையும் வரும் 30-ம் தேதி வரை திறக்க அரசு தடை விதித்து இருந்தது.

இந்நிலையில் இன்று புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதுவையில் வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தினமும் மதியம் 2 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர பிற கடைகளை திறக்க தடை விதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

From around the web