இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு தடை..! மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு?

 
Cryptocurrency-banned-in-india

இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு ஒன்றிய அரசு தடை விதிக்கப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோ கரன்சி பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பிறகு கிரிப்டோ கரன்சியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. சுமார் 1.5 கோடி பேர் கிரிப்டோ கரன்சியில் ரூ.40 ஆயிரம் கோடிக்குப் பணம் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் கிரிப்போட கரன்சிகள் மூலம் தீவிரவாதிகளுக்குப் பணம் செல்ல வாய்ப்புண்டு என அண்மையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அதேபோல் கடந்த வாரம் அதிகாரிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கிரிப்டோ கரன்சி இந்திய நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கக் கூடும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்சி தடை குறித்தும் டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேலை ஒன்றிய அரசு கிரிப்டோ கரன்சிக்கு தடைவிதித்தால் அதில் முதலீடு செய்தவர்களின் பணம் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் அதில் முதலீடு செய்தவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web