இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி மூலப்பொரு்ள்! அதிபர் பைடன் அனுமதி!!

 
இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி மூலப்பொரு்ள்! அதிபர் பைடன் அனுமதி!!

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க அதிபர் பைடன் அனுமதி அளித்துள்ளார்.

இந்தியாவில், குறிப்பாக வடமாநிலங்களில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் ஓலக்குரல்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகள் இந்தியா மீது அனுதாபம் தெரிவிப்பதுடன் உதவிக்கரம் நீட்டவும் முன் வந்துள்ளார்கள்.

சரியான மருத்துவக் கட்டமைப்பு இல்லாத உ.பி.  குஜராத் அரசுகளில் நிர்வாகக் குறைபாடுகளை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு என்று சிக்கல்கள் அதிகரித்துள்ளது. 

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருளை இந்தியாவுக்கு தருமாறு கேட்ட போது, எங்கள் மக்களுக்குத் தேவை இருப்பதால் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய இயலாது என்று அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலைவனும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் தொலைபேசியில் பேசி இந்திய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.  இந்திய மக்களுடன் தோளோடு தோள் நிற்பதற்கு அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. இந்தியாவுக்கு அதிக அளவுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று ஜேக் சுலைவன் குறிப்பிட்டு இருந்தார்.

ஜேக் சுலைவனின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள அதிபர் பைடன், மருத்தவமனைகள் நிரம்பி வழிந்த அமெரிக்காவின் இக்கட்டான நேரத்தில் இந்தியா உதவியை அனுப்பியிருந்தது போல், இந்த நேரத்தில் இந்தியாவுக்கு உதவி செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.


 

From around the web