ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய்க்கு கொரோனா உறுதி..!

 
Nithyanand-Rai

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும் புதிய வகை ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய்க்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “கடந்த 2 நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாசிடிவ் என தெரிய வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொண்டு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

From around the web