தொடர் கனமழை... இடிந்து விழுந்த தேசிய நெடுஞ்சாலை..! வைரல் வீடியோ

 
Arunachal-Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கணமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அதன் தலைநகரான இட்டாநகரில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 415 இன் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இந்த நெடுஞ்சாலையானது 59 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. அண்மையில் கட்டப்பட்ட இந்த தேசிய நெடுஞ்சாலையானது அருணாச்சலப் பிரதேசத்தின் பண்டாரதேவாவில் தொடங்குகிறது. அஸ்ஸாமில் இருக்கும் கோபூரில் இந்த நெடுஞ்சாலை முடிவடைகிறது.


 

From around the web