பஞ்சாபில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம்; முதல்வர் பதவியை நிராகரித்தார் அம்பிகா சோனி!!

 
Ambika-Soni

பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு திருப்பங்களையடுத்து காங்கிரஸ் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் பதவி விலகினார்.

உள்கட்சி பூசல் காரணமாக பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் நேற்று ராஜினாமா செய்தார். பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் புதிய முதல்வர் யார்? என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கட்சி தலைவர் சோனியா காந்தி புதிய முதல்வரை தேர்வு செய்வார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அம்பிகா சோனி முதல்வர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த அம்பிகா சோனி, சீக்கியர் அல்லாத முதல்வர் என்றால் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் அதனால், தனது பெயரை முதல்வர் பதவிக்கு முன்மொழிய வேண்டாம் எனவும் அம்பிகா சோனி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

From around the web