கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு! ராகுல் காந்தி ட்வீட்!!

 
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு! ராகுல் காந்தி ட்வீட்!!

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பகுதியளவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

 எனினும், தொற்று பரவல் குறையாமல் உள்ளது. பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த யோசித்து வரும்  மத்திய அரசு, பாதிக்கப்படும் பகுதிகளில் மட்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.  

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து ஊரடங்கை அமல்படுத்தலாம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் கொரோனாவால் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்” என பதிவிட்டுள்ளார்.

From around the web