குரைத்த நாய் அடித்துக் கொன்ற தூய்மைப் பணியாளர்கள் சஸ்பெண்ட்..!

 
Madhya-Pradesh

குரைத்த நாயை அடித்துக் கொன்ற தூய்மைப் பணியாளர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள கதேகான் பகுதியில், தங்களைப் பார்த்து குரைத்த நாயை தூய்மைப் பணியாளர்கள் இருவர் கம்பால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த நாய், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது.

இந்த சம்பவத்தை பார்த்த சிலர், தங்கள் செல்போனில் அந்தக் காட்சியை வீடியோவாக பதிவுசெய்து இணையத்தில் பகிர்ந்தனர். இதைப் பார்த்த நகராட்சி நிர்வாக அதிகாரி அனில் ஜோஷி, நாயை அடித்துக் கொன்ற தூய்மைப் பணியாளர்கள் இருவரையும் அழைத்து எச்சரித்தார்.

Madhya-pradesh

இதனிடையே, பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அனைவரும் தூய்மைப் பணியாளர்களின் இந்த செயலுக்கு எதிராக களமிறங்கினர். இதன்விளைவாக, ஊழியர்கள் இருவரையும் நகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. அத்துடன், காவல்துறை சார்பில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவாஸ் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூர்யகாந்த் சர்மா கூறுகையில், “விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

From around the web