வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதம் தள்ளுபடி - மத்திய அரசு

 
வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதம் தள்ளுபடி - மத்திய அரசு

வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான 10 சதவீத இறக்குமதி வரியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக 2 லட்சத்திற்கு மேலாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு 2.73 லட்சமாக பதிவாகி உச்சத்தை தொட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தடுப்பூசி வினியோகத்தை அதிகரிக்கும் விதமாக வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான 10 சதவீத இறக்குமதி வரியை தள்ளுபடி செய்ய  உள்ளதாக கூறப்படுகிறது.  

இது தொடர்பாக பேசிய மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், அரசின் தலையீடு இன்றி தனியார் நிறுவனங்களே தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, வெளிச்சந்தையில் விலை வைத்து விற்பனை செய்ய அனுமதி அளிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறினார்.

ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட்  ஜான்சன் ஆகியோர் தங்கள் தயாரிப்புகளை இந்தியாவுக்கு விற்க அனுமதிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும்  கொரோனா தடுப்பூசிகளுக்கான 10 சதவீத சுங்க வரியை தள்ளுபடி செய்யும் என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர்  ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

நேபாளம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற தெற்காசிய நாடுகளும், அர்ஜென்டினா மற்றும் பிரேசில் போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளும் தடுப்பூசி இறக்குமதி கட்டணங்களை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை விதிக்கின்றன.

From around the web