மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் திடீர் உடல் நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி!

 
Ramesh Pokhriyal

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார்.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து திரும்பினார். தொடர்ந்து தனது பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

From around the web