ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பிக் கொடுக்கும் தொழிலதிபர்!! பாராட்டுக்களை பெரும் தொழிலதிபரின் மனிதநேயம்

 
ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பிக் கொடுக்கும் தொழிலதிபர்!! பாராட்டுக்களை பெரும் தொழிலதிபரின் மனிதநேயம்

உத்தரப்பிரதேசத்தில் தொழிலதிபர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பிக் கொடுத்து வருவது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-ம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் முக்கியப்பங்காற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

கள்ளச்சந்தையில் ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், உத்தரபிரதேசத்தில், ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை நடத்தி வரும் மனோஜ் குப்தா என்ற தொழிலதிபர் நாள்தோறும் ஆயிரம் பேருக்கு ஒரு ரூபாய் என்ற விலையில் ஆக்சிஜன் சிலிண்டரை நிரப்பிக் கொடுத்து உதவி வருகிறார்.

கடந்த ஆண்டு தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது ஆக்சிஜன் உதவி தேவைப்பட்டதாகவும், அதனை மனதில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web