அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி... எக்சிட் போல்கள் சொல்வது என்ன?

 
அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி... எக்சிட் போல்கள் சொல்வது என்ன?

அசாமில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாமில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 126 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டசபையில் பெரும்பான்மையை பெற 64 இடங்கள் தேவை.

ரிபப்ளிக் டிவி - சிஎன்எக்ஸ்: பாஜக எளிதில் வெற்றி பெறும். பாஜக 74 - 84 இடங்களில் வெற்றி பெறும், காங்கிரஸ் கூட்டணி 40-50 இடங்களை கைப்பற்றும்.

ஏபிபி நியூஸ் - சி வோட்டர்: பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும். பாஜக 58 -71 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 53 - 66 இடங்களிலும் வெற்றி பெறும்.

என்டிடிவி: பாஜக கூட்டணி 72 முதல் 126 இடங்களை கைப்பற்றி, மீண்டும் ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெறும்.

இந்தியா டுடே: பாஜக கூட்டணி 75 முதல் 85 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 50 இடங்களை கைப்பற்றும்.

மனோரமா நியூஸ் - விஎம்ஆர்: பாஜக கூட்டணி 75 முதல் 85 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும். காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 50 இடங்களை பிடிக்கும்.

பி - எம்ஏஆர்க்யூ: காங்கிரஸ் கூட்டணி 56 முதல் 64 இடங்களை பிடிக்கும். பாஜக கூட்டணி 62 மதல் 70 இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்கும்.

From around the web