வனப்பகுதியில் கால்பந்து விளையாடிய கரடிகள்... வைரல் வீடியோ

 
Odisha

ஒடிசாவில் வனப்பகுதியில் 2 கரடிகள் கால்பந்து விளையாடியது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ காட்சிகளை, மாவட்ட வனத்துறை அதிகாரி வெளியிட்டுள்ளார். தரையில் கிடந்த கால்பந்தை பார்த்ததும் ஆர்வம் பொங்க இரண்டு கரடிகள் விளையாடி மகிழ்ந்தன.

வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பார்வையாளர்களாக மாறி கைதட்ட, பந்தை எடுத்துக் கொண்டு கரடிகள் வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தன.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


 

From around the web