தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை

 
தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை வரும் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

அன்றைய தினம் 5 மாநிலங்களிலும் தேர்தல் வெற்றியைக் கொண்டாட தேர்தல் ஆணையம்  தடை விதித்துள்ளது. தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை இன்று உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

From around the web