இந்தியாவிலிருந்து அமெரிக்கா வருவதற்கு தடை! அதிபர் பைடன் அறிவிப்பு!!

 
இந்தியாவிலிருந்து அமெரிக்கா வருவதற்கு தடை! அதிபர் பைடன் அறிவிப்பு!!

இந்தியாவிலிருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு அதிபர் பைடன் தடை விதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து. அயர்லாந்து மேலும் 26 நாடுகளுக்கு அதிபர் பைடன் இந்த தடை விதித்துள்ளார். கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருப்பதால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதிக்க உள்ளார் பைடன்.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் இந்தியா சென்றவர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதிக்கப்படுகிறது. அமெரிக்க குடிமக்கள், க்ரீன்கார்டுக்காரர்கள் மற்றும் சில குறிப்பிட்ட அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளது. ஹெச்1 பி விசாவில் இந்தியா சென்றவர்கள் திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலைக்குள் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.

From around the web