அசாமில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை; மீறினால் 3 வருட சிறை!!

 
Assam

அசாமில் கோயில்களின் 5 கி.மீ சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்யவோ வாங்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது மீறினால் 3 வருட சிறைத்தணடனை விதிக்கப்படும்.

அசாமில் ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான புதிய மசோதாவில்  இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் கால்நடைகளை கொல்வது  மற்றும் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் புதிய மசோதாவில் அசாம் கால்நடை பாதுகாப்பு மசோதா 2021-ன் கீழ் ஒரு கோயிலின் 5 கி.மீ. சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய மற்றும் வாங்குவதற்கு  தடை விதிக்கப்பட்டு உள்ளது.

முறையான ஆவணங்கள் இன்றி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும், அசாமுக்கு வெளியேயும் கால்நடைகளை கொண்டு செல்வது சட்டவிரோதமாகும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாது. இந்த குற்றத்திற்கு 3 வருடம் சிறை தண்டனை  அல்லது ரூ .3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் அல்லது இரண்டிற்கும் இடையில் வேறுபடக்கூடிய அபராதம் விதிக்கப்படும்.

புதிய சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஒருவர் 2-வது முறையாக அதே குற்றத்தைச் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தண்டனை இரண்டு மடங்காகும்.

இந்த சட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும், மேலும் ‘கால்நடைகள்’ என்றால் காளைகள், மாடுகள், பசு, கன்றுகள், ஆண் மற்றும் பெண் எருமைகள் மற்றும் எருமை கன்றுகளுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டு உள்ளது.

From around the web