பாபு... பாபு... எந்திருச்சு வா பாபு...! திருமண மண்டபத்திற்கு வெளியே லிவிங் டுகெதர் காதலி கதறல்!

 
Madhya-Pradesh

ஆண் நண்பருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதை அறிந்த பெண் திருமண மண்டபத்துக்கு வெளியே ஆண் நண்பரை உரத்த குரலில் அழைத்தபடி கூச்சலிட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் தன்னோடு பணியாற்றிய ஆண் நண்பருடன் 3 ஆண்டுகள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

ஆண் நண்பருக்கு வேறொரு பெண்ணுடன் ஹோஷங்கபாத்தில் திருமணம் நடைபெறுவதை அறிந்த இளம்பெண் திருமண மண்டபத்திற்கு வெளியே கண் கலங்கியபடி பாபு பாபு என கதறி கூப்பாடு போட்டார்.

போலீசார் அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காதல் தோல்வியால் விரக்தி அடைந்த பெண்ணிற்கு சமூக வலைத்தளங்களில் ஆறுதல்கள் குவிந்தன.


 

From around the web