காவல்நிலையத்தில் விசாரணைக்குச் சென்ற மதப்பிரச்சாரகர் மீது தாக்குதல்.!

 
Raipur

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறிக் கிறித்துவ மதப் பிரச்சாரகரைக் காவல் நிலையத்திலேயே இந்து அமைப்பினர் தாக்கியுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மதப்பிரச்சாரகர் ஒருவர் அங்குள்ள மக்களை மதம் மாற்ற முயன்றதாகக் கூறிக் காவல்நிலையத்துக்குப் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சென்றபோது மதப்பிரச்சாரகருடன் இருந்தவர்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் விசாரணைக்காக மதப்பிரச்சாரகரைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் சென்ற இந்து அமைப்பினர் காவல்துறையினரின் முன்னிலையிலேயே கிறித்தவ மதப்பிரச்சாரகர் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.


 

From around the web