சட்டமன்ற தேர்தல்... பிரதமர் மோடியுடன் பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் சந்திப்பு

Punjab-BJP-leaders-meet-Modi

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் பாஜக தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது.

பிரதமர் மோடியை பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் பாஜக தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது.  

மாநில பொறுப்பாளர் துஷ்யந்த் குமார், மாநில தலைவர் அஷ்வினி குமார், தேசிய பொதுச்செயலாளர் தருன் சவுக் ஆகியோர் பிரதமர் மோடியுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, விவசாயிகள் போராட்டம், சட்டமன்ற தேர்தல், கர்தார்புர் வழித்தடம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

From around the web