இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல்..?

 
Zydus

சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு ஓரிரு நாள்களில் அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. அதன் ஒரு அங்கமாக, சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள சைகோவ்-டி என்ற தடுப்பூசிக்கு ஓரிரு நாள்களில் அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்படும் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதற்கான தரவுகளை ஆராய்வதற்காக இந்த வாரம் நிபுணர் குழு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், சில கூட்டங்கள் நடைபெற்ற பிறகே அவசர கால அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

12 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான தரவுகளையும் சைடஸ் கேடிலா நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.

உலகின் முதல் பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசியான சைகோவ்-டி, மூன்று தவணைகளாக செலுத்தப்படவுள்ளது.

From around the web