பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் கரே நியமனம்.. யார் இந்த அமித் கரே?

 
Amit-Khare

பிரதமர் மோடியின் ஆலோசகராக, ஓய்வு பெற்ற உயர் கல்வித் துறைச் செயலர் அமித் கரே நியமிக்கப்பட்டு உள்ளார்.

பிரதமர்  மோடியின் ஆலோசகராக, ஓய்வு பெற்ற உயர் கல்வித் துறைச் செயலர் அமித் கரே நியமிக்கப்பட்டு உள்ளார். ஒன்றிய அரசின் உயர் கல்வித் துறைச் செயலராக பணியாற்றி, கடந்த மாதம் ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித் கரே.

அதற்கு முன் மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறைகளின் செயலராகவும் இருந்துள்ளார்.  இந்நிலையில் பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் கரே இன்று நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித் கரேவை, பிரதமரின் ஆலோசகராக நியமிக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய செயலாளர் அந்தஸ்து வழங்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை அமித் காரே அப்பதவியில் இருப்பார்.” என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியது மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை சார்பில், ‘டிஜிட்டல் மீடியா’ விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியதில் அமித் கரே முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web