பாஜகவில் இணையவில்லை... காங்கிரசில் தொடரும் எண்ணம் இல்லை - அமரிந்தர் சிங்

 
Amarinder singh

காங்கிரசில் தொடருவதில் எந்த ஒரு நன்மையும் விளையப்போவதில்லை என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

சித்துவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து விலகிய அமரிந்தர் சிங், நேற்று  பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை நேரில் சந்தித்தார்.

இந்தநிலையில்,  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில் பாஜகவில் அமரிந்தர் இணையபோவதாக தகவல் பரவியது.

இது குறித்து பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் கூறியதாவது,

காங்கிரசில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை. பாஜகவில் இணையவில்லை, அதே நேரத்தில் காங்கிரசில் தொடரும் எண்ணம் இல்லை.  காங்கிரசில் மூத்த தலைவர்களின் பேச்சுக்கு மரியாதை இல்லை என்றார்.

From around the web