எல்லா எக்ஸிட் போல்களும் சொல்வது ஒன்றுதான்... கேரளாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் பினராயி விஜயன்!!

 
எல்லா எக்ஸிட் போல்களும் சொல்வது ஒன்றுதான்... கேரளாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் பினராயி விஜயன்!!

கேரளாவில் இடதுசாரிகள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று நேற்று வெளியான அனைத்துக் கருத்துக்கணிப்புகளிலும் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

வாக்குப்பதிவுக்கு முன் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் இடதுசாரிகளே மீண்டும் வெல்வார்கள் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் 72-80, காங்கிரஸ் 58-64, பாஜக 1-5 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா டுடே-ஆக்ஸிஸ் மை இந்தியா, நியூஸ் 24- டுடே சாணக்கியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் இடதுசாரிகள் 100+ இடங்களில் வெல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே-ஆக்ஸிஸ் மை இந்தியாவின் கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் 104-120 இடங்களிலும், காங்கிரஸ் 0-36 இடங்களிலும், பாஜக 0-2 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 24- டுடே சாணக்கியா கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் 102, காங்கிரஸ் 35, பாஜக மூன்று இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏபிபி - சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்றாலும், கடந்த முறை பெற்ற இடங்களைவிட குறைவான இடங்களிலேயே வெல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் 71-77 இடங்களைக் கைப்பற்றுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 62-68 இடங்களிலும் பாஜக 0-2 இடங்களிலும் வெல்வார்கள் என ஏபிபி சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் பி-மார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் 72-79 இடங்களிலும், காங்கிரஸ்+ 60-66 இடங்களிலும் பாஜக 0-3 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

From around the web