இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை.! எங்கு தெரியுமா? மதுபிரியர்கள் கவலை

 
Madhya-pradesh-liquor-shop-announces

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என மாவட்ட கலால் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டம் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி, மத்திய பிரதேசத்தின் ஹண்ட்வா மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மதுப்பிரியர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹண்ட்வா மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே கடைகளில் மது விற்பனை செய்யப்படும் என மாவட்ட கலால் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு மாவட்டத்தில் மொத்தமுள்ள 74 மதுக்கடைகளிலும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மதுப்பிரியர்கள் மது வாங்க வேண்டுமானால் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை கடை ஊழியரிடம் காண்பிக்க வேண்டும். ஆதாரம் உண்மையாக இருந்தால் மட்டுமே அந்த நபருக்கு மதுபானம் வழங்கவேண்டும் என மதுபான கடை ஊழியர்களுக்கு மாவட்ட கலால் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

From around the web