ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஏர்ஸ்டிரிப்... போர் விமானத்தை தரையிறக்கும் ஒத்திகை!

 
National-HIghways

முதன்முதலாக ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானத்தை தரையிறக்கும் ஒத்திகை இந்த வாரம் நடைபெறுகிறது.

போர் விமானங்களை அவசர காலங்களில் சாலைகளில் தரையிறக்குவதற்காக நாடு முழுவதும் 28 தேசிய நெடுஞ்சாலையை ஒன்றிய அரசு தேர்வு செய்துள்ளது. இதற்காக விமானப்படையினருடன் இணைந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கி வருகிறது.

இதில் ராஜஸ்தானின் பார்மரில் மூன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்று தொடக்க விழாவுக்கு தயாராகி உள்ளது. இந்த சாலை இந்த வாரம் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதை ஒன்றிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்க உள்ளனர்.

இதையொட்டி இந்த சாலையில் போர் விமானத்தை அவசரமாக தரையிறக்கி ஒத்திகை பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக, மேற்படி அமைச்சர்கள் இருவருடனே விமானப்படை விமானம் ஒன்று இந்த சாலையில் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முன்னதாக லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த 2017-ம் ஆண்டு போர் விமானம் ஒன்றை தரையிறக்கி ஒத்திகை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

From around the web