ஒரே நாளில் 298 உயிரிழப்புகள்! உத்தரப் பிரதேசத்தில் உக்கிரத்தில் கொரோனா!!

 
ஒரே நாளில் 298 உயிரிழப்புகள்! உத்தரப் பிரதேசத்தில் உக்கிரத்தில் கொரோனா!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 298 பேர் கொரோனாவில் பலியாகியுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத நிலை என உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது வரையிலும் 12 லட்சத்து 17 ஆயிரத்து 955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய 298 உயிரிழப்புகளையும் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 35 ஆயிரத்து 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை. தவறான தகவல் பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  கூறியுள்ளார்.

From around the web