மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள்; நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

 
Modi-tributes-to-gandhi

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

தேசப்பிதா மாகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் மரியாதை செலுத்தினார்.

காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்டோரும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஏராளமான மக்களுக்கு வலிமை தரும் காந்தியின் உன்னத கோட்பாடுகள் உலக அளவில் பொருத்தமானவை” எனப் பதிவிட்டுள்ளார்.

From around the web