இந்தியா திறமைசாலிகளின் உலகம்!பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இந்தியா குளோபல் வீக் என்ற இணையவழி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த உரையில் தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச பொருளாதார மீட்சியில் இந்தியாவின் பங்கு அதிகமாக இருக்கும். பல்வேறு சவாலான சூழ்நிலைகளை இந்தியா
 

இந்தியா திறமைசாலிகளின் உலகம்!பிரதமர் மோடி பெருமிதம்!ந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இந்தியா குளோபல் வீக் என்ற இணையவழி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அந்த உரையில் தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச பொருளாதார மீட்சியில் இந்தியாவின் பங்கு அதிகமாக இருக்கும். பல்வேறு சவாலான சூழ்நிலைகளை இந்தியா முறியடித்து வெற்றியை ஈட்டியுள்ளது. இந்தியா திறமைசாலிகளின் உலகம். சக்தியை உலகம் முழுவதும் பார்த்திருப்பீர்கள்.

உலகத்தின் அனைத்து நாடுகளும் இந்தியாவை கண்டு வியக்கிறது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்களை அரவணைத்து சலுகைகளை வழங்குவதோடு மீட்டெடுப்பதிலும் தீவிர முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். சமூகம் , பொருளாதாரம் என ஒவ்வொரு சவாலையும் இந்தியா வென்று வருகிறது.

சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம். வேளாண், பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் முதலீட்டிற்கு ஏற்றவையாக உள்ளன.

பெரு நிறுவனங்கள் தொழில்துவங்க இந்தியாவில் சாதகமான சூழல் ஏற்பட்டு வருகிறது. விண்வெளித்துறையிலும் தனியாரின் பங்களிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web