உலக அளவில் டாப் 10 நாடுகளில் இந்தியா! அதிகரிக்கும் கொரோனாவால் அதிர்ச்சியில் தலைவர்கள்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளயும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகம் உள்ள பட்டியலில் தற்போது வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார்17லட்சம் பேர் என
 

உலக அளவில் டாப் 10 நாடுகளில் இந்தியா!  அதிகரிக்கும் கொரோனாவால் அதிர்ச்சியில் தலைவர்கள்!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளயும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகம் உள்ள பட்டியலில் தற்போது வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இதுவரை அமெரிக்காவில்  மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார்17லட்சம் பேர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த இடத்தில்  பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தற்போது இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில் உலக அளவில் கொரோனாவால் அதிகம்  பாதிக்கப்பட்டவர்கள்  பட்டியலில் முதல் 10 இடத்தில்  இந்தியா இடம் பெற்றுள்ளது.

இதுவரை  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை சுமார்  1.4லட்சம் பேர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகளின் பட்டியல்:
அமெரிக்கா – 17லட்சம் பேர்
பிரேசில்- 3.6 லட்சம்
ரஷியா- 3.4 லட்சம்
ஸ்பெயின்- 2.8லட்சம்
பிரிட்டன்- 2.9லட்சம்
இத்தாலி- 2.2லட்சம்
பிரான்ஸ்- 1.8 லட்சம்
ஜெர்மனி-1.8லட்சம்
துருக்கி-1.6லட்சம்
இந்தியா-1.3லட்சம்

A1TamilNews.com

From around the web