அமெரிக்கா அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா தகுந்த பதிலடி!

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வரும் வேளையில் சீன ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து வருகிறது. இந்தியாவின் உள்ளே வந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய எல்லைப் பகுதி கிராமங்களில் கூடாரங்கள் , பதுங்கும் குழிகள் அமைப்பதற்காக கனரக இயந்திரங்களும், போர்விமானங்களும் குவிக்கப்பட்டு வருகின்றன. சீனா, இந்தியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு சுமூகமாக பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பை டிவிட்டரில்
 

அமெரிக்கா அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா தகுந்த பதிலடி!கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வரும் வேளையில் சீன ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து வருகிறது. இந்தியாவின் உள்ளே வந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய எல்லைப் பகுதி கிராமங்களில் கூடாரங்கள் , பதுங்கும் குழிகள் அமைப்பதற்காக கனரக இயந்திரங்களும், போர்விமானங்களும் குவிக்கப்பட்டு வருகின்றன.

சீனா, இந்தியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு சுமூகமாக பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

மேலும் இந்தியா, சீனா இரண்டு நாடுகளும் அதிக மக்கள் தொகையையும், சக்திவாய்ந்த ராணுவங்களையும் கொண்டவை. தற்சமயம் இந்தியாவும், சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா பரவலுக்குப் பிறகு ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துகளுக்காக அமெரிக்க அதிபர், பிரதமர் மோடியிடம் பேசினார்.

அதன்பிறகு இருநாட்டு தலைவர்களும் பேசிக் கொள்ளவில்லை என்ற அதிரடி உண்மையை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதுபோல் இந்தியா சார்பில் எந்த கோரிக்கைகளும் அமெரிக்காவிடம் விடுக்கப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

A1TamilNews.com

From around the web