தண்ணீரில் தத்தளிக்கும் கிரிக்கெட் மைதானம் – போட்டி ரத்து

ஹிமாசலப் பிரேதச மாநிலம் தா்மசாலாவில் நடைபெற இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் 3 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. முதல் ஆட்டம் தா்மசாலாவிலும், இரண்டாவது ஆட்டம் லக்னோவிலும், கடைசி ஒரு நாள் போட்டி கொல்கத்தாவிலும் நடத்த திட்டமிடப்பட்டது. அந்த வகையில் முதல் போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக போட்டி தொடங்க முதலில் தாமதமானது. மழை
 

தண்ணீரில் தத்தளிக்கும் கிரிக்கெட் மைதானம் – போட்டி ரத்துஹிமாசலப் பிரேதச மாநிலம் தா்மசாலாவில் நடைபெற இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் 3 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. முதல் ஆட்டம் தா்மசாலாவிலும், இரண்டாவது ஆட்டம் லக்னோவிலும், கடைசி ஒரு நாள் போட்டி கொல்கத்தாவிலும் நடத்த திட்டமிடப்பட்டது.

அந்த வகையில் முதல் போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக போட்டி தொடங்க முதலில் தாமதமானது. மழை நீர் தேங்காமல் இருக்க மைதானத்தை மூடினர். ஆனாலும் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்த வருத்தத்தில் உள்ளது. இந்திய ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா உடனான போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மழை அந்த அனலை தணித்துவிட்டது. அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

http://www.A1TamilNews.com

 

From around the web