வருமான வரித்துறை பிடியில் “பிகில்”… பின்னணியில் அரசியலா?

பிகில் படத்திற்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக வருமான வரித்துறையினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர் பிகில் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், திரைப்பட வினியோகிஸ்தர் அன்புச் செழியன், நடிகர் விஜய் வீடு உட்பட வீடுகள், அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித் துறையின் ரெய்டு நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. யாருடைய பெயரையும் நேரிடையாக குறிப்பிடாமல் வெளியாகியுள்ளது என்றாலும் பிகில் படத்தில் நடித்த விஜய், தயாரிப்பாளர், வினியோகிஸ்தர் மற்றும் ஃபைனான்சியரையே அவை
 

வருமான வரித்துறை பிடியில் “பிகில்”… பின்னணியில் அரசியலா?பிகில் படத்திற்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக வருமான வரித்துறையினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்

பிகில் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், திரைப்பட வினியோகிஸ்தர் அன்புச் செழியன், நடிகர் விஜய் வீடு உட்பட  வீடுகள், அலுவலகங்களில்  நடைபெற்ற வருமான வரித் துறையின் ரெய்டு நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. யாருடைய பெயரையும் நேரிடையாக குறிப்பிடாமல் வெளியாகியுள்ளது என்றாலும்  பிகில் படத்தில் நடித்த விஜய், தயாரிப்பாளர், வினியோகிஸ்தர் மற்றும் ஃபைனான்சியரையே அவை குறிப்பிடுவதாக இருக்கிறது.

அன்புச் செழியன் வீட்டில் 77 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது. பிகில் படத்திற்காக விஜய்க்கு ரொக்கமாக 20 கோடி ரூபாய் அன்புச்செழியன் கொடுத்துள்ளதாக ஒரு குறிப்பும் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் தயாரிப்பாளர் தரப்பில் 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததற்கான ஆவணமும் கிடைத்துள்ளதாம். மொத்தத்தில் 50 கோடி ரூபாயை பிகில் படத்திற்காக விஜய் பெற்றுக் கொண்டதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து ஆய்வுகள் செய்யப்படுவதாகவும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது,

இந்த விவகாரத்தில், படப்பிடிப்பின் நடுவே இருந்த விஜய்-ஐ அழைத்து வந்த விதம் குறித்து பல கருத்துகள் எழுந்துள்ளது. அது முறையானது அல்ல என்று பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமியும் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் அவதூறு வழக்கு தொடரலாம் என்றும் அவர் அட்வைஸ் செய்துள்ளார்.

ரஜினிகாந்த் மீதான வருமான வரி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக அவர் பேட்டி கொடுத்தது, விஜய் வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு என மூன்றையும் சிலர் முடிச்சி போட்டு பேசுகின்றனர். பாஜக தரப்புக்கு ஆதரவாக விஜய் யை திருப்புவதற்காக மறைமுகமான நெருக்கடி என்றும் சிலர் கூறுகின்றனர். கணிசமான இளைஞர்களை ரசிகர்களாகக் கொண்டுள்ள விஜய், ரஜினிக்கு எதிராக அரசியல் நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த ரெய்டு என்று கூறுபவர்களும் உண்டு.

விஜய்-க்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் களம் இறங்கியுள்ளனர். வருமான வரி ஏய்ப்பு செய்தாரா விஜய்? இந்த விவகாரத்திலிருந்து எப்படி மீண்டு வருவார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளனர். அடுத்ததாக பொது மேடையில் விஜய் பேசப்போகும் விஷயங்கள் தான் இதற்கான பதிலாக அமையும்.

– மணி

https://A1TamilNews.com

From around the web