சிவசேனா- காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் உடன்பாடு… தேசிய அரசியலின் புதிய திருப்பம்!

சிவசேனாவுடன் காங்கிரஸூம் தேசியவாத காங்கிரஸூம் ஒரு பொது உடன்பாட்டை எட்டியுள்ளன. இந்தியாவின் தற்போதைய அதிகார அரசியல் நகர்வுகளில் முக்கியமான ஒன்று இது. வெகுகாலமாக பா.ஜ.க வுடன் இருந்த அரசியல் உறவையும் கூடவே கொள்கை ரீதியான உறவையும் கூட சிவசேனா பரிசீலனைக்குள்ளாக்கியிருக்கிறது.. இனியும் பா.ஜ.கவுடன் குலைந்து கொண்டிருப்பது அதன் ஒற்பை்படை இந்துத்துவ கடலில் தாங்கள் பெருங்காயமாக கரைந்துவிடுவோம் என்கிற எச்சரிக்கையுணர்வும் அதை சாத்தியப்படுத்துவதற்கான அரசியல் சந்தர்ப்பமும் கைகூடியிருக்கையில், அதை அக்கட்சி வலுவாக பற்றிக் கொண்டிருக்கிறது. மனோகர் ஜோஷிக்கு பிறகு
 

சிவசேனா- காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் உடன்பாடு… தேசிய அரசியலின் புதிய திருப்பம்!சிவசேனாவுடன் காங்கிரஸூம் தேசியவாத காங்கிரஸூம் ஒரு பொது உடன்பாட்டை எட்டியுள்ளன. இந்தியாவின் தற்போதைய அதிகார அரசியல் நகர்வுகளில் முக்கியமான ஒன்று இது.

வெகுகாலமாக பா.ஜ.க வுடன் இருந்த அரசியல் உறவையும் கூடவே கொள்கை ரீதியான உறவையும் கூட சிவசேனா பரிசீலனைக்குள்ளாக்கியிருக்கிறது.. இனியும் பா.ஜ.கவுடன் குலைந்து கொண்டிருப்பது அதன் ஒற்பை்படை இந்துத்துவ கடலில் தாங்கள் பெருங்காயமாக கரைந்துவிடுவோம் என்கிற எச்சரிக்கையுணர்வும் அதை சாத்தியப்படுத்துவதற்கான அரசியல் சந்தர்ப்பமும் கைகூடியிருக்கையில், அதை அக்கட்சி வலுவாக பற்றிக் கொண்டிருக்கிறது. மனோகர் ஜோஷிக்கு பிறகு ஒரு சிவசேனா முதல்வர் கிடைக்கும் வாய்ப்பு இன்றைய சூழலில் சாமானியமானதல்ல.

பா.ஜ.க வின் இந்துத்துவத்திலிருந்து சிவசேனாவின் இந்துத்துவம் வேறுபடும் புள்ளிகள் உண்டு. பா.ஜ.கவின் இந்துத்துவம் சித்பவன பார்ப்பனீயத்தில் வேர்கொண்டதென்றால் சிவசேனாவுடையது அதன் மராத்தி பெருமிதத்தில் வேர்கொண்டுள்ளது. மராட்டிய தனியடையாளங்களும் கலாச்சார பெருமிதங்களும் இந்தி பொது அடையாளத்தில் கரைந்தழிவதும் குறிப்பாக மும்பை ஒரு மராட்டிய தலைநகர் என்பதைத்தாண்டி அதன் அடையாளங்கள் மங்கலாக போனதும் பற்றி மராட்டியர்களுக்குள்ள புழுக்கத்தின் அரசியல் திரட்சியே சிவசேனா.. அந்த மராட்டிய பெருமிதத்தின் குறியீடாக முகலாய பேரரசிற்கு எதிராக போராடிய சிவாஜி இருப்பதால் அதன் துணைவிசையாக இந்துத்துவத்தையும் அது துணைக்கழைத்துக்கொண்டது..

மராட்டியத்தின் தொழில் வணிகத்தில் குஜராத்திகளின் ஆதிக்கம் பற்றி பம்பாய் மாகாணமாக இருந்த காலந்தொட்டு மராட்டியர்களிடையே இருந்த ஆற்றாமையும் இதனோடு இணைந்து கொண்டது. எனவேதான் நாடு முழுவதும் இந்துத்துவ அரசியலின் முதல்வரிசை ஆட்டக்காரனான பா.ஜ.க அவர்களின் சித்தாந்த பிதாமகர்களின்(சாவர்க்கர், டாக்டர்.மூஞ்சே, ஹெக்டேவார், கோல்வால்கர், கேட்சே) மண்ணான மராட்டியத்தில் சிவசேனாவின் பின்னால் ஓடிக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று.

இந்த சூழ்நிலை கடந்த 2014 ல் மோடி ஆட்சி அமைந்த பிறகான சட்டப்பேரவைத்தேர்தலில் மாறி தொகுதி உடன்பாட்டில் ஏற்பட்ட பிணக்கால் கூட்டணியின்றி தனித்தனியாக போட்டியிட்டதற்கு பின் பா.ஜ.க அதிகமான இடங்களை வென்றதால் வேறு வழியின்றி பக்கவாத்தியமாக இயங்க வேண்டியதாயிற்று.

இதன்பிறகு கடந்த நாடாளுமன்ற தேர்தல்வரை இருகட்சிகளுக்குமான நிர்ப்பந்த கூட்டணி நீடித்தாலும் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத்தேர்தல் மிக எளிதானது என்கிற மிதப்பில் களம்கண்ட இக்கூட்டணியை சரத்பவாரின் சாதுர்யமும் முனைப்பும் காயடித்து முதல்வர் தேவேந்திர பட்நாவிஸிற்கு நீ ஒரு எல்.கே.ஜிதான் என உணர்த்தியது..

பட்நாவிஸின் வழியாக மராத்தி பெருமிதத்தை நீக்கிய தனக்கேற்ற பார்ப்பனீய இந்துத்துவத்தை வளர்த்தெடுக்க முற்பட்ட ஆர்.எஸ்.ஸின் கனவிலும் மண்ணள்ளி போட்டிருக்கிறார் பவார்.  இப்போதைய அரசியல் உடன்பாட்டுக்கான சித்தாந்த காரணிகள் ஏதுமில்லைதான். ஆனால் கள அரசியல்காரணிகள் வலுவாகவே இருக்கின்றன. பார்ப்பனீய இந்துத்துவத்தின் வழியே குஜராத்தி மேலாதிக்கம் திரும்பிவருவது பற்றிய அச்சம் பா.ஜ.க அதிகாரம் பெறுவதை தடுக்க இக்கூட்டணிக்கு கிடைத்திருக்கும் காரணி.

இதற்கு மராட்டிய சமூகத்தின் கருத்துருவாக்க சக்திகளின் ஆதரவும் இருக்கிறது.. இதன்வழியே சிவசேனா தனது கடும்போக்கு இந்துத்துவத்தை நீர்க்க செய்துவிட்டு மராட்டிய பண்பாட்டு அரசியலை தீவிரப்படுத்தும். தேசிய கட்சியான காங்கிரஸ் தனது முந்தைய ஒட்டுமொத்த தேசியவாத கொள்கைகளை தேசிய இனங்களின் மொழி மற்றும் பண்பாட்டு பெருமிதங்களின் அரசியல் தொகுப்பாக மாறும்.. அதற்கான பாதை ஏற்கனவே கர்நாடகத்தில் முந்தைய முதல்வர் சித்ராமையாவால் போடப்பட்டிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் குஜராத்திகளின் தொழில்சார் மேலாதிக்கத்தை கள அரசியலின் வழியே மட்டுப்படுத்தும் தனது வழமையான பாத்திரத்தை வகிக்கும்..

எனவே இது தற்போதைய தேசிய அரசியலின் போக்கில் ஒரு புதிய திருப்பம்.. தவிர்க்கவே இயலாத திருப்பம்

– இரா. முருகானந்தம் 

From around the web