ஐஐடி விடுதியில் தற்கொலையை தடுக்க நூதன திட்டம்!

மாணவர்கள் தூக்குப் போட இயலாதவாறு சென்னை ஐஐடி விடுதிகளில் உள்ள மின்விசிறிகளில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை ஐஐடியில் அடிக்கடி தற்கொலை நிகழ்வுகள் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், புதியதொழில்நுட்பத்தை மின்விசிறியில் கொண்டுவர ஐஐடி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி வரும் குளிர்கால விடுமுறைக்கு மாணவர்கள் செல்லும்பொழுது விடுதிகளில் உள்ள மின்விசிறியில் ஸ்பிரிங் வசதி பொறுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ஒருவர் மின்விசிறி மூலம் தற்கொலைக்கு முயலும் போது அதிலுள்ள ஸ்பிரிங் மூலம் கீழ் நோக்கி விழும்.
 

ஐஐடி விடுதியில் தற்கொலையை தடுக்க நூதன திட்டம்!மாணவர்கள் தூக்குப் போட இயலாதவாறு சென்னை ஐஐடி விடுதிகளில் உள்ள மின்விசிறிகளில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை ஐஐடியில் அடிக்கடி தற்கொலை நிகழ்வுகள் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், புதியதொழில்நுட்பத்தை மின்விசிறியில் கொண்டுவர ஐஐடி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி வரும் குளிர்கால விடுமுறைக்கு மாணவர்கள் செல்லும்பொழுது விடுதிகளில் உள்ள மின்விசிறியில் ஸ்பிரிங் வசதி பொறுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் ஒருவர் மின்விசிறி மூலம் தற்கொலைக்கு முயலும் போது அதிலுள்ள ஸ்பிரிங் மூலம் கீழ் நோக்கி விழும். இதனால் மாணவர்கள் தற்கொலைக்கு முயலும் போது கீழே விழுந்து விடுவார்கள்.

இந்த தொழில்நுட்பம் கொண்ட மின்விசிறிகள் அனைத்து விடுதிகளிலும், மாற்றியமைக்க ஐஐடி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

A1TamilNews.com

From around the web