அரசியலுக்காக சினிமா சம்பாத்தியத்தை தியாகம் செய்யமாட்டேன்! – கமல் ஹாஸன்

சென்னை: கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்டு 10-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கமல்ஹாசன் அளித்த பேட்டி: “விஸ்வரூபம்-2 படம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. நாடு இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் காரணம். அதில் எனக்கு வருத்தம் உண்டு. இந்த படத்தின் கதை உருவாக காரணம் அந்த வருத்தம்தான். 2007-ம் ஆண்டுக்கு முன்பு விஸ்வரூபம்-2 கதை எழுதப்பட்டது. அப்போது தசாவதாரம், மன்மதன் அம்பு என்ற கோணத்தில் பயணித்ததால் அப்போது எடுக்க முடியவில்லை. எனவே இப்போது அதை
 


சென்னை: கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்டு 10-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கமல்ஹாசன் அளித்த பேட்டி:

“விஸ்வரூபம்-2 படம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. நாடு இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் காரணம். அதில் எனக்கு வருத்தம் உண்டு. இந்த படத்தின் கதை உருவாக காரணம் அந்த வருத்தம்தான். 2007-ம் ஆண்டுக்கு முன்பு விஸ்வரூபம்-2 கதை எழுதப்பட்டது. அப்போது தசாவதாரம், மன்மதன் அம்பு என்ற கோணத்தில் பயணித்ததால் அப்போது எடுக்க முடியவில்லை.

எனவே இப்போது அதை சொந்தமாக தயாரித்துள்ளேன். விஸ்வரூபம்-1 படத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய போதே தடைகளை தாண்டி விஸ்வரூபம்-2 படத்தை தொடங்கி விட்டோம். படத்தில் அரசியல் தொடர்பான வசனங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் படம் எடுக்கவில்லை.

அமெரிக்கா தரப்பிலும், தீவிரவாதிகள் தரப்பிலும் தவறு இருக்கிறது என்ற ரீதியில்தான் படத்தை எடுத்துள்ளேன். படத்தில் அரசியல் கட்சி கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தவில்லை. அதற்கு வேறு மேடைகள் உள்ளன.

எம்ஜிஆரின் அரசியல்

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த காலத்தில் தொழில் நுட்பம் கிடையாது. அதனால் அவர் தனது படங்களில் கட்சி கொடி, சின்னத்தை காட்டினார்.

விஸ்வரூபம்-2 படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் விஸ்வரூபம்-3 படத்தை எடுப்பது பற்றி யோசிப்பேன். விஸ்வரூபம்-2 படத்திற்கு எதிர்ப்பு வராது என்று நினைக்கிறேன். அப்போது வந்த எதிர்ப்பு அரசியல் ரீதியானது. இப்போது படத்தை எதிர்க்கும் கெட்டிக்காரத்தனம் யாருக்கும் இல்லை.

தொழில்நுட்பத்தை தடுக்க முடியாது

விஸ்வரூபம்-1 படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்ப முடிவு செய்து இருந்தேன். ஆனால் தடைகள் ஏற்பட்டது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேறு ஒரு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டேன். அதனால் டி.டி.எச்.சில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. தியேட்டர்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக புதிய தொழில் நுட்பத்தை தடுக்கக்கூடாது.

கடைசி படம் அல்ல

இது எனது கடைசி படம் அல்ல. கட்சி பணியில் இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அரசியலுக்காக சினிமா சம்பாத்தியத்தை தியாகம் செய்யமாட்டேன். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்கள் பணியை செய்வேன் என்று சொன்னதெல்லாம் பொய். எனது தொழில் சினிமா. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பிறகும் நடித்தார்.

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். முதலில் அங்கு உணவு பொருள் கட்டணத்தை குறைக்கட்டும்.”

 

From around the web