நீதிமன்ற தீர்ப்பு நகலுடன் வேதா இல்லம் செல்வேன்! ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவிப்பு!

முன்னாள் முதல்வரான ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அவசர அரசாணை வெளியிட்டிருந்தது. ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீபாவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. வேதா இல்லத்தின் ஒரு பகுதியை நினைவில்லமாகவும், ஒரு பகுதியை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் பயன்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, சட்டத்தின்
 

நீதிமன்ற தீர்ப்பு நகலுடன் வேதா இல்லம் செல்வேன்! ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவிப்பு!முன்னாள் முதல்வரான ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அவசர அரசாணை வெளியிட்டிருந்தது.

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீபாவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

வேதா இல்லத்தின் ஒரு பகுதியை நினைவில்லமாகவும், ஒரு பகுதியை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் பயன்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிருபிக்கும் வகையில் வழங்கப்பட்ட நியாயமான தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். தற்போது அதிமுகவில் இருக்கும் கட்சியினர் அனைவரும் இதை ஏற்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுடன் வேதா இல்லத்திற்கு செல்லவே விரும்புகிறேன். அச்சுறுத்தல் இருப்பதால் எங்களுடைய பாதுகாப்பை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

ஜெயலலிதாவின் சொத்துக்கள் நேர்மையான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் என தீபா தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web