ஐ சப்போர்ட் ரஜினிகாந்த்… சமூகத்தளத்தில் கலக்கும் ஆன்லைன் பெட்டிஷன்!

Change.org என்ற இணையத்தளம் மூலம் அமெரிக்க அதிபர் தொடங்கி உலகில் உள்ள முக்கியத் தலைவர்கள், அதிபர்கள், அமைப்புகளுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த விண்ணப்பத்தில் கையெழுத்து இருந்தால் அமெரிக்க நாடாளுமன்றம் அந்த கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். ஆன்லைன் கவன ஈர்ப்பு தீர்மானம் என்று கூட சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட கோரிக்கையை, கொள்கையை முன்வைத்து தனிநபரோ, கூட்டாகவோ அல்லது ஏதாவது அமைப்பு சார்பிலோ இத்தகைய கோரிக்கை வைக்கப்படும். அதை ஆதரிப்பவர்கள் தங்கள் பெயரைக் குறிப்பிட்டு
 

ஐ சப்போர்ட் ரஜினிகாந்த்… சமூகத்தளத்தில் கலக்கும் ஆன்லைன் பெட்டிஷன்!Change.org என்ற இணையத்தளம் மூலம் அமெரிக்க அதிபர் தொடங்கி உலகில் உள்ள முக்கியத் தலைவர்கள், அதிபர்கள், அமைப்புகளுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த விண்ணப்பத்தில் கையெழுத்து இருந்தால் அமெரிக்க நாடாளுமன்றம் அந்த கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

ஆன்லைன் கவன ஈர்ப்பு தீர்மானம் என்று கூட சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட கோரிக்கையை, கொள்கையை முன்வைத்து தனிநபரோ, கூட்டாகவோ அல்லது ஏதாவது அமைப்பு சார்பிலோ இத்தகைய கோரிக்கை வைக்கப்படும். அதை ஆதரிப்பவர்கள் தங்கள் பெயரைக் குறிப்பிட்டு கூடுதல் கருத்துக்களையும் சேர்ப்பது வழக்கம்.

மேல்நாடுகளில் பிரபலமான இந்த Change.Org விண்ணப்பத்தை ரஜினி ரசிகர்கள் கையிலெடுத்துள்ளார்கள். ஆன்மீக அரசியல் என்ற பெயரில் இந்த விண்ணப்பம் தொடங்கப் பட்டுள்ளது. 

கடந்த வாரம் ரஜினிகாந்த் முன் வைத்த மூன்று முக்கிய அரசியல் முடிவுகளை  ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு ஆதரவு கோரி இந்த கோரிக்கையின் இணையத்தள முகவரியை வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்து வருகிறார்கள்.

https://www.change.org/p/rajinikanth-i-support-rajini-s-political-revolution

முழுமனதோடு நம்முடைய ஆதரவை ரஜினிகாந்தின் புரட்சிகரமான அரசியல் எண்ணங்களுக்கு தெரிவிப்போம் என்ற உறுதிமொழியுடன், கையெழுத்து கோரியுள்ளார்கள். இந்த ஆன்லைன் விண்ணப்பம் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களிடம் வெகு விரைவாகச் சென்றடைந்துள்ளது. குறுகிய காலத்தில் சுமார் 3ஆயிரம் பேர்கள் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை ரஜினிகாந்துக்கு தெரிவித்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web