நான்கில் ஒருத்தருக்கு ப்ளட் பிரஷர்…. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சித் தகவல்!

டெல்லி: இந்தியாவில் பெரியவர்களில் நான்கில் ஒருத்தருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 20 கோடி பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தும் திட்டம் இந்தியா முழுவதும் 100 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தகங்கள், மருத்துவ நலத்திட்டப் பணியாளர்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் புதிய முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்படும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்
 

நான்கில் ஒருத்தருக்கு ப்ளட் பிரஷர்…. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சித் தகவல்!டெல்லி: இந்தியாவில்  பெரியவர்களில் நான்கில் ஒருத்தருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 20 கோடி பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தும் திட்டம் இந்தியா முழுவதும் 100 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தகங்கள், மருத்துவ நலத்திட்டப் பணியாளர்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் புதிய முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்படும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த திட்டம் பஞ்சாப், மத்திய பிரதேசம், கேரளா, மஹாராஷ்ட்ரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 25 மாவட்டங்களில் செயல்படுத்தப் பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த மருத்தவரும் விஞ்ஞானியுமான பிரதீப் கவுர் இது குறித்து கூறியுள்ளதாவது, “உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களில் பாதிப்பேர் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் 10ல் ஒருவருக்கு மட்டுமே ரத்த அழுத்தம் கட்டுபாட்டுக்குள் உள்ளது. இதனால், ஏராளமானோர் இளவயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக் கோளாறு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

தொடர் கண்காணிப்பு, உடற்பயிற்சி, உணவில் உப்பு மற்றும் சர்க்கரையை குறைத்து காய்கறி, பழங்களை அதிகரித்தல், புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைப்பது போன்ற அன்றாட வாழ்க்கை முறைகளை உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் உலக சுகாதார மையத்துடன் இணைந்து India Hypertension Control Initiative (IHCI) என்ற பெயரில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியாவில் நாலு பேர்லே ஒருத்தருக்கு இருக்கு என்ற தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

ஹைப்பர் டென்ஷன்னு சொல்றதுக்கு வேணும்னா ஸ்டைலா இருக்கலாம். டாஸ்மாக்கால் குடிப்பழக்கம் அதிகரித்து விட்ட நிலையில், உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வும், தற்காத்துக் கொள்ளும் முயற்சிகளும் அவசியம் மக்களே!

– வணக்கம் இந்தியா 

 

From around the web