பிரதமர் மோடி இன்று ஹூஸ்டன் வருகை.. பிரம்மாண்டமான ஏற்பாடு!

ஹூஸ்டன்: பிரதமர் மோடியின் ஹூஸ்டன் வருகையையொட்டி பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிபர் ட்ரம்பும் பிரதமர் மோடியுடன் பங்கேற்று, உரையாற்ற உள்ளார். 50, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்காவின் பல நகரங்களிலிருந்தும் ஹூஸ்டன் வந்துள்ளார். அமெரிக்க நேரப்படி காலை 6 மணி அளவில் என்.ஆர்.ஜி அரங்கத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன., உரிய அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே, அரசு அடையாள அட்டையை காட்டி, பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். காலை 8:45 மணிக்கு
 

பிரதமர் மோடி இன்று ஹூஸ்டன் வருகை.. பிரம்மாண்டமான ஏற்பாடு!ஹூஸ்டன்: பிரதமர் மோடியின் ஹூஸ்டன் வருகையையொட்டி பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிபர் ட்ரம்பும்  பிரதமர் மோடியுடன் பங்கேற்று, உரையாற்ற உள்ளார்.

50, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்காவின் பல நகரங்களிலிருந்தும் ஹூஸ்டன் வந்துள்ளார். அமெரிக்க நேரப்படி காலை 6 மணி அளவில் என்.ஆர்.ஜி அரங்கத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன., உரிய அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே, அரசு அடையாள அட்டையை காட்டி, பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

காலை 8:45 மணிக்கு தேசியகீதத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். 9:45 மணிக்கு அனைவரும் அரங்கத்திற்குள் கட்டாயம் அமர வேண்டும். அதன் பின்னர் பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பின் முக்கிய உரைகள் இடம் பெறும். பகல் 12.30 மணிக்கு ’ஹௌடி மோடி’ நிகழ்ச்சி நிறைவடையும்.

போப் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குப் பின், வெளிநாட்டுத் தலைவருக்காக அமெரிக்காவில்  50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுவே ஆகும் என்பது குறிப்பிடத் தக்கது.

திங்கட் கிழமை ஹூஸ்டன் நகரின் முக்கிய நிறுவனத் தலைவர்களை பிரதமர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெக்சாஸ் கவர்னர் க்ரேக் அபாட்-ஐயும் பிரதமர் சந்திக்கிறார்.

 

From around the web