ஹூஸ்டனில் பிரதமர்… ‘ஹௌடி மோடி’

ஹூஸ்டன்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்டமான விழா டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டனில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 2ம் தேதி ஹுஸ்டன் என்ஆர்ஜி ஸ்டேடியத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. டெக்சாஸ் இந்தியா ஃபோரம் என்ற தன்னார்வ அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ’ஹௌடி மோடி’ என்ற பெயரிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியினரின் வரவேற்பு நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. அமெரிக்கா முழுவதும் உள்ள 600க்கும் மேற்பட்ட இந்திய
 

ஹூஸ்டனில் பிரதமர்… ‘ஹௌடி மோடி’

ஹூஸ்டன்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்டமான விழா டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டனில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 2ம் தேதி ஹுஸ்டன் என்ஆர்ஜி ஸ்டேடியத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

டெக்சாஸ் இந்தியா ஃபோரம் என்ற தன்னார்வ அமைப்பு  இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ’ஹௌடி மோடி’ என்ற பெயரிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியினரின் வரவேற்பு நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. அமெரிக்கா முழுவதும் உள்ள 600க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி அமைப்புகள் இந்த நிகழ்ச்சியில் டெக்சாஸ் இந்தியா ஃபோரம் – உடன் இணைந்துள்ளார்கள். 

50 ஆயிரம் பேர்களுக்கு மேற்பட்டவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பதிவு செய்துள்ளார்கள். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்கள். 1000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பம்பரமாக சுழன்று ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. https://www.howdymodi.org/ என்ற இணையத்தளமும் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

ஹூஸ்டனில் பிரதமர்… ‘ஹௌடி மோடி’

அமெரிக்காவில் போப்பாண்டவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியாக ‘ஹௌடி மோடி’ நிகழ்ச்சி அமைய உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் இந்திய வம்சாவளியினர் திரண்டு வருகிறார்கள்.

இந்தியப் பிரதமர் ஒருவருகு அமெரிக்காவில் இத்தகைய பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத் தக்கது.

 

From around the web