வெள்ளிக்கிழமை பூஜை செய்வது எப்படி?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நம் வீடுகளில், அம்பிகைக்கு சுக்ர வார பூஜை செய்வது விசேஷம். இதை தொடர்ந்து செய்திட நோய்,கடன் ,வறுமை நீங்கி ஆயுள், ஆரொக்கியம் பெருகும். சகல வளங்களும் கிடைக்கும் என்பது ஆன்மீக அன்பர்கள் கருத்து. இந்தப் பூஜையை மிக எளிமையாக செய்துவிடலாம். பூஜைக்கு முந்தைய நாளான வியாழக்கிழமையே வீடு ,வாசல் சுத்தம் செய்து பூஜைப் பொருட்கள், விளக்கு என பூஜைப் பொருட்களையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து
 

வெள்ளிக்கிழமை பூஜை செய்வது எப்படி?

வ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நம் வீடுகளில், அம்பிகைக்கு சுக்ர வார பூஜை செய்வது விசேஷம். இதை தொடர்ந்து செய்திட நோய்,கடன் ,வறுமை நீங்கி ஆயுள், ஆரொக்கியம் பெருகும். சகல வளங்களும் கிடைக்கும் என்பது ஆன்மீக அன்பர்கள் கருத்து.

இந்தப் பூஜையை மிக எளிமையாக செய்துவிடலாம். பூஜைக்கு முந்தைய நாளான வியாழக்கிழமையே வீடு ,வாசல் சுத்தம் செய்து பூஜைப் பொருட்கள், விளக்கு என பூஜைப் பொருட்களையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து நீராடி, வாசலில் கோலம் இட்டு, பூஜைப் பொருட்கள், சுவாமி விக்ரகங்கள் மற்றும் படங்களுக்கு சந்தனம், குங்குமம், பூ சாற்ற வேண்டும். “ஓம் ஒளி வளர் விளக்கே போற்றி” என்று சொல்லியவாறே விளக்கினை ஏற்ற வேண்டும்.

முழுமுதற் கடவுளான கணபதியை துதித்த பின் , அம்பிகை பூஜையைத் தொடங்கலாம். அவரவர்க்கு தெரிந்த அம்பிகை போற்றி, துதிகளைப் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும்.

விக்ரகங்களுக்கு பத்தி, சாம்பிராணி தூப , தீபங்கள் காட்ட வேண்டும்.வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வடை என ஏதாவது முடிந்த நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும்.

கற்பூர ஆரத்தி காட்டி, நமஸ்காரம் செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.
அன்றைய நாள் முழுவதுமே நேரம் கிடைக்கும் போது அம்பிகையின் திருநாமங்களை உச்சரித்த வண்ணம் வேலையைத் தொடர வேண்டும்.

https://www.A1TamilNews.com

From around the web