கிருஷ்ண ஜெயந்தியை வீடுகளில் எவ்விதம் கொண்டாடுவது?

பக்தியோடு இலை, பூ, பழம் அல்லது கொஞ்சம் தண்ணீர் ஏதாவது ஒன்றை மனதார சமர்ப்பிக்க கிருஷ்ணன் மனமுவந்து ஏற்றுக் கொள்வான் என்பதை கிருஷ்ணனே கீதையில் சொல்லியிருப்பதால் கிருஷ்ண ஜெயந்தியை எளிமையாக இருந்தாலும் மனமார பிரார்த்திக்க வேண்டும். கிருஷ்ணரது சிலையை வைத்து முதலில் நெய் ,தண்ணீர், பால்,தேன், தயிர், கடைசியாக தண்ணீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.சுவாமிக்கு சந்தனம் குங்குமம் இட்டு,புஷ்பங்களால் அலங்கரிக்க வேண்டும்.நம்மால் இயன்ற புது வஸ்திரமும் சாத்தலாம். கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல்,வெண்ணெய், நாவற்பழம் ,சீடை, முறுக்கு, அப்பம்
 

கிருஷ்ண ஜெயந்தியை வீடுகளில் எவ்விதம் கொண்டாடுவது?க்தியோடு இலை, பூ, பழம் அல்லது கொஞ்சம் தண்ணீர் ஏதாவது ஒன்றை மனதார சமர்ப்பிக்க கிருஷ்ணன் மனமுவந்து ஏற்றுக் கொள்வான் என்பதை கிருஷ்ணனே கீதையில் சொல்லியிருப்பதால் கிருஷ்ண ஜெயந்தியை எளிமையாக இருந்தாலும் மனமார பிரார்த்திக்க வேண்டும்.

கிருஷ்ணரது சிலையை வைத்து முதலில் நெய் ,தண்ணீர், பால்,தேன், தயிர், கடைசியாக தண்ணீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.சுவாமிக்கு சந்தனம் குங்குமம் இட்டு,புஷ்பங்களால் அலங்கரிக்க வேண்டும்.நம்மால் இயன்ற புது வஸ்திரமும் சாத்தலாம்.

கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல்,வெண்ணெய், நாவற்பழம் ,சீடை, முறுக்கு, அப்பம் , பால், வெண்ணெயால் செய்த பலகாரங்கள் இவற்றில் நம்மால் செய்ய முடிந்தவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். பூஜையின் போது கிருஷ்ணாஷ்டகம்,ஸ்ரீமத் பாகவதம்,கிருஷ்ணன் கதைகள் சொல்லிய பிறகு கற்பூர ஆர்த்தி காட்ட வேண்டும்.

வீடுகளில் பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி விரதத்தை கணவனும்,மனைவியும் சேர்ந்து அனுஷ்டித்தால் நன்மைகள் பல சேர்ந்து வரும். பகற்பொழுதில் கிருஷ்ணனை நினைத்து உபவாசம் இருந்து இரவில்,கண்ணனது திருநாமத்தை உச்சரித்து வழிபடலாம்.

ஒரு கோகுலாஷ்டமி தினத்தில் இருக்கும் விரதமானது, பல்லாயிரம் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதற்கு சமம். கண்ணன் திருவடிகளை மனமார வழிபடுவோம். வீடும், நாடும் நலம் பெற பிரார்த்திப்போம்.

A1TamilNews.com

From around the web