ஆசிரமத்தை நாடாக மாற்றும் நித்தியானந்தா? கைநிறைய காசிருந்தால் போகலாம் கைலாசம்!

நித்யானந்தாவின் கைலாசா தீவில் குடியேற விரும்புவோர் அதற்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கை நிறைய காசிருந்தால் மட்டுமே கைலாசாவுக்குள் நுழைய முடியும் எனக்கூறப்படுகிறது. இமயமலைத் தொடரில் இருக்கும் ஒரு மலைக்கு கைலாயம் என்று பெயர். ஆனால் கைலாயத்தை இமயமலையில் இருந்து ஈக்குவடார் நாட்டுக்கு இடம் மாற்றிவிட்டார் நித்யானந்தா. ஆம் அங்குள்ள ஒரு தீவை பல கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா எனப்பெயர் வைத்திருக்கிறார் அவர். தனது தனி நாட்டிற்கு ஐ.நா. சபையின் ஒப்புதலை
 

ஆசிரமத்தை நாடாக மாற்றும் நித்தியானந்தா? கைநிறைய காசிருந்தால் போகலாம் கைலாசம்!நித்யானந்தாவின் கைலாசா தீவில் குடியேற விரும்புவோர் அதற்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கை நிறைய காசிருந்தால் மட்டுமே கைலாசாவுக்குள் நுழைய முடியும் எனக்கூறப்படுகிறது.

இமயமலைத் தொடரில் இருக்கும் ஒரு மலைக்கு கைலாயம் என்று பெயர். ஆனால் கைலாயத்தை இமயமலையில் இருந்து ஈக்குவடார் நாட்டுக்கு இடம் மாற்றிவிட்டார் நித்யானந்தா. ஆம் அங்குள்ள ஒரு தீவை பல கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா எனப்பெயர் வைத்திருக்கிறார் அவர். தனது தனி நாட்டிற்கு ஐ.நா. சபையின் ஒப்புதலை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நித்யானந்தா.

கைலாசா ஒரு இந்து நாடு என அறிவித்திருக்கும் நித்யானந்தா அதற்கென தனிக்கொடி, பாஸ்போர்ட், முத்திரை போன்றவற்றையும் அறிவித்துள்ளார். கைலாசா நாடு தனி கரன்சியையும் பெற்றிருக்கும் எனக்கூறப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவையே கைலாசா நாட்டின் மொழிகள். பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட 10 துறைகளைக் கொண்டிருக்குமாம் கைலாசா நாடு. நடிகையும் நித்யானந்தாவின் பிரதான பக்தையுமான ரஞ்சிதாதான் கைலாசா நாட்டின் பிரதமர் எனக்கூறப்படுகிறது.

கைலாசா நாட்டுக்கு குடியேற விரும்புவோர் அதற்காக விண்ணப்பிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. KAILAASA.ORG என்ற இணையதளம்தான் கைலாசா நாட்டுக் கதவை திறக்கும் சாவி. அதன் வழியாகவே அங்கு குடியேற விண்ணப்பிக்க முடியும். ஆனால் கைலாசாவுக்குள் நுழைவது அவ்வளவு எளிதல்ல. நித்யானந்தாவின் சீடராய் இருந்தால் மட்டுமே கைலாசாவுக்குள் கால் வைக்க முடியும்.

அதுதவிர கைலாசா நாட்டின் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஒப்புதலும் தேவையாம். இவற்றையெல்லாம் விட முக்கியமாக கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நிபந்தனைகளும் பொருந்தினால் கைலாசாவுக்கு எடுக்கலாம் டிக்கெட்.

https://www.A1TamilNews.com

From around the web