Flashback: கலைஞர் கையால் விருது! சபதத்தை வென்று காட்டிய சூப்பர்ஸ்டார்!! 

அபூர்வ ராகங்கள் படத்தில் கலைஞர் கையால் பரிசு வாங்க முடியாததால் ஏமாற்றமடைந்த சூப்பர்ஸ்டார் ராஜாதி ராஜா படத்தில் தன் சபதத்தை வென்றுக் காட்டினார். ராஜாதி ராஜா படத்தின் வெற்றிவிழா 1989ம் ஆண்டு மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த விழாவில் ரஜினி பேசும்போது, ” அபூர்வராகங்கள் படம் 100 நாட்கள் ஓடியது, அப்போதும் தமிழக முதல்வர் கலைஞர்தான், அந்த வெற்றிவிழாவில் முதல்வரின்
 
Flashback: கலைஞர் கையால் விருது! சபதத்தை வென்று காட்டிய சூப்பர்ஸ்டார்!! 
அபூர்வ ராகங்கள் படத்தில் கலைஞர் கையால் பரிசு வாங்க முடியாததால் ஏமாற்றமடைந்த சூப்பர்ஸ்டார் ராஜாதி ராஜா படத்தில் தன் சபதத்தை வென்றுக் காட்டினார்.
 
ராஜாதி ராஜா படத்தின் வெற்றிவிழா 1989ம் ஆண்டு மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
 
அந்த விழாவில் ரஜினி பேசும்போது, ” அபூர்வராகங்கள் படம் 100 நாட்கள் ஓடியது, அப்போதும் தமிழக முதல்வர் கலைஞர்தான், அந்த வெற்றிவிழாவில்  முதல்வரின் கையால் பரிசு வாங்க வேண்டும் என்று அதைப் பார்க்க என் நண்பர்கள் சிலரையும் அழைத்திருந்தேன். ஆனால் எனக்கு அப்போது பரிசு கிடைக்கவில்லை. கலைஞருக்கு வேறு வேலை இருந்தால் சிலருக்கு மட்டும் பரிசு வழங்கிவிட்டுச் சென்றுவிட்டார். 
அன்றுதான் நான் ஒரு சபதத்தை எடுத்தேன், இன்று எனக்கு பரிசு கிடைக்கவில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் கலைஞர் கையால் பரிசு வாங்கியே தீருவேன் என்று. அது 14 ஆண்டுகள் அழித்து இன்று நிறைவேறியுள்ளது.
 
எத்தனையோ முறை பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தாலும், இன்று அதே கலைஞர் அதே முதல்வர் கையால் பரிசு வாங்குவது எனக்கு பெருமையாகவுள்ளது. என் சபதமும் நிறைவேறிவிட்டது,” என்றார்.
 
மேடையில் இருந்த கருணாநிதி இதைக் கேட்டு கைதட்டிச் சிரித்தார்.
 

From around the web