ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் கிடைச்சது எப்படி தெரியுமா?

அதிகாலை நேரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி சிவகுமாரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆர்.எஸ்.பாரதியை ரிமாண்ட் செய்து காவல்துறையின் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதியிடம், அரசு வழக்கறிஞர் நடராஜன் கோரிக்கை வைத்தார். கைது நடவடிக்கை தெரிந்தவுடன் திமுகவின் மூத்த வழக்கறிஞர்களும் தற்போதைய மாநிலங்களவை எம்.பி.க்களுமான என்.ஆர். இளங்கோ மற்றும் பி.வில்சன் ஆகிய இருவரும் ஆர்.எஸ்.பாரதிக்காக ஆஜர் ஆனார்கள். ஆர்.எஸ்.பாரதி ஏற்கனவே சிறப்பு
 

ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் கிடைச்சது எப்படி தெரியுமா?திகாலை நேரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி சிவகுமாரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆர்.எஸ்.பாரதியை ரிமாண்ட் செய்து காவல்துறையின் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதியிடம், அரசு வழக்கறிஞர் நடராஜன் கோரிக்கை வைத்தார். கைது நடவடிக்கை தெரிந்தவுடன் திமுகவின் மூத்த வழக்கறிஞர்களும் தற்போதைய மாநிலங்களவை எம்.பி.க்களுமான என்.ஆர். இளங்கோ மற்றும் பி.வில்சன் ஆகிய இருவரும் ஆர்.எஸ்.பாரதிக்காக ஆஜர் ஆனார்கள்.

ஆர்.எஸ்.பாரதி ஏற்கனவே சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அந்த மனு நிலுவையில் உள்ளது. என்று திமுக வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். அரசு வழக்கறிஞர் நடராஜன், இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு. எனவே ஆர்.எஸ்.பாரதியை ரிமாண்ட் செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவகுமார், ஜூன்1 ம் தேதிக்குள் நீதிமன்றத்திற்கு சரணடைய வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதியி்ன் மனு நிலுவையில் இருப்பதாலும், அவருடைய உறவினர்கள் கொரோனா சிகிச்சைப் பணியிலிருப்பதால், ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்பினால், கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பிருப்பதாலும் ரிமாண்ட் செய்ய தடை விதித்துள்ளதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.

அதிகாலையே கைது செய்யப்பட்டாலும் சிறைக்குச் செல்லாமல், நீதிபதியின் வீட்டிலிருந்தே தன்னுடைய வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.ஆக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதோடு, கொரோனாவும் சேர்ந்தே இடைக்கால ஜாமீன் பெற்றுத் தந்துள்ளது. 

A1TamilNews.com

From around the web