17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சுற்றுச்சுவரின்‌ உரிமையாளர் கைது

கோவை மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சுற்றுச்சுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நடூர் ஆதி திராவிடர் காலனியில் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகளில் விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருந்த காவல்துறையினர் , 20 அடி உயர சுற்றுச்சுவரை அமைத்திருந்த சிவசுப்ரமணியத்தை தேடிவந்தனர். அவரை உடனடியாகக் கைது செய்து மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய
 

17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சுற்றுச்சுவரின்‌ உரிமையாளர் கைதுகோவை மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சுற்றுச்சுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர்‌ சிவசுப்ரமணியத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நடூர் ஆதி திராவிடர் காலனியில் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகளில் விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருந்த காவல்துறையினர் , 20 அடி உயர சுற்றுச்சுவரை அமைத்திருந்த சிவசுப்ரமணியத்தை தேடிவந்தனர். அவரை உடனடியாகக் கைது செய்து மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சிவசுப்ரமணியத்தை கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web