டெக்சாஸில் கொளுத்தும் வெயிலால் நிறுத்தப்பட்ட குதிரைப் பந்தயம்!

க்ராண்ட் ப்ரெய்ரி : டெக்சாஸ் முழுவதும் அனல் காற்று வீசுவதால், லோன் ஸ்டார் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த குதிரைப் பந்தயம் நிறுத்தப் பட்டுள்ளது. ஜெயில் கைதிகளுக்கு குளிர்ந்த தண்ணீரில் குளிக்க அனுமதிக்கப் பட்டுள்ளது. டெக்சாஸில் குறிப்பாக வடக்கு டெக்சாஸில் ஜூலை,ஆகஸ்டு மாதங்கள் அறிவிக்கப்படாத அக்னி நட்சத்திரம் நாட்கள் தான். 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் மிகச் சாதாரணமாக இருக்கும். ஏர்கண்டிஷன் இல்லை என்றால் குடியிருக்க முடியாத நிலை தான். ஏசி பழுதாகி, உடனடி ரிப்பேருக்கு அழைத்தால் கொள்ளைப்
 
டெக்சாஸில் கொளுத்தும் வெயிலால் நிறுத்தப்பட்ட குதிரைப் பந்தயம்!
க்ராண்ட் ப்ரெய்ரி : டெக்சாஸ் முழுவதும் அனல் காற்று வீசுவதால், லோன் ஸ்டார் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த குதிரைப் பந்தயம் நிறுத்தப் பட்டுள்ளது. ஜெயில் கைதிகளுக்கு குளிர்ந்த தண்ணீரில் குளிக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.
 
டெக்சாஸில் குறிப்பாக வடக்கு டெக்சாஸில் ஜூலை,ஆகஸ்டு மாதங்கள் அறிவிக்கப்படாத அக்னி நட்சத்திரம் நாட்கள் தான். 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் மிகச் சாதாரணமாக இருக்கும்.  ஏர்கண்டிஷன் இல்லை என்றால் குடியிருக்க முடியாத நிலை தான். ஏசி பழுதாகி, உடனடி ரிப்பேருக்கு அழைத்தால் கொள்ளைப் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.
 
வெள்ளிக்கிழமை முதல் டல்லாஸ் உள்ளிட்ட வடக்கு பகுதியிலும் ஹுஸ்டன் போன்ற தெற்குப் பகுதியிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. ஞாயிற்றுக் கிழமை மாலை வரை இந்த நிலை நீடிக்கும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. சனிக்கிழமை டல்லாஸில் வெயில் 110 டிகிரியை (43 டிகிரி செல்சியஸ்) தொட்டுள்ளது. 
 
டல்லாஸ் மாநகரப் பகுதியில் உள்ள க்ராண்ட் ப்ரெய்ரியில் நடைபெற இருந்த குதிரைப் பந்தயம் நிறுத்தப் பட்டுள்ளது. குதிரைகளுக்கும், ஜாக்கிகளுக்கும் இந்த வெயில் பாதிப்பை ஏற்படுத்தும் என  மருத்துவர்களின் அறிவுரைகள் படி போட்டி நடைபெறவில்லை. 
 
டெக்சாஸில் ஏர்கண்டிஷன் செய்யப் படாத ஜெயில்களில், கைதிகளுக்கு குடிப்பதற்கும், குளிப்பதற்க்கும் குளிர்ந்த நீர் கொடுக்கப் பட்டுள்ளது. ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட பிரார்த்தனை அறைகளிலும், ஜெயில் அலுவலக அறைகளிலும் தங்குவதற்கும் அனுமதிக்கப் பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் வடமேற்கு, வடகிழக்கு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள குளிர்காலத்தை சமாளிக்க முடியாமல் டெக்சாஸ் நோக்கி குடிபெயர்கிறார்கள். வந்த இடத்தில் வெயிலை சமாளிக்க முடியாமல் புலம்புவதைக் கேட்க முடிகிறது.
 
 

From around the web